Tuesday, September 11, 2012

திருமதிள்கள்


ஸ்ரீ:
ஸ்ரீமத்யை கோதாயை நம:
ஸ்ரீமதே இராமனுசாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீமத்  வரத குரவே நம:

பொதுவாக திருகோவிலை சுற்றியுள்ள அரண்களையே மதிள்கள் என குறிப்பிடப்படுகின்றன. ஆனால் இதற்க்கு விதி விலக்காக பட்டரும், நம்பிள்ளையும் வேறொன்றை மதிள்கள் என குறிப்பிடுவதாக அறிகிறோம். வீர சுந்தர பிரம்மராயனிடம் பட்டர், கல்லினால் ஆன இந்த மதிளைக் காட்டிலும் அடியவர்கள் செய்யும் மங்களாசாசனமே அரங்கனை பாதுகாப்பது என கூறினார் என்பது அவரது வாழ்க்கையில் இருந்து கிடைக்கும் குறிப்பாகும். 

நம்பிள்ளையின் ஈட்டில் இருந்து கிடைக்கும் வரலாற்று நிகழ்வு பின்வருமாறு 

(நண்ணா வசுரர் நலிவெய்த) அவ்யபதேச்யனுக்கு அநந்தரத்திலவன் தமப்பன் செய்ததைக் கேட்டு, “இவன் என் செய்தான் ஆனான்!” என்று கர்ஹித்தான். “ஒரு மதிளை வாங்குங்காட்டில் அத்தர்சனம் குலைந்ததோ, ஸ்ரீராமாயணம் என்றும் திருவாய்மொழி என்றும் வலியன இரண்டு மஹாப்ரபந்தங்கள் உண்டாயிருக்க!” என்றானாய்த்து. (திருவாய்மொழி ஈடு வ்யாக்கியானம், 10-7-5)

இக்காலத்தில் "அவ்யபதேசன்கள்" இருப்பதை கண் கூடாகக் காண்கிறோம். அவர்கள் நமது சம்பிரதாயத்தை பாழாக்கும் வழிகளில் இறங்குவது அனைவரும் அறிந்த ஒன்றே. இன்றைக்கு "அவன் மகன்" இருந்தால் அவன் பகர்வது 

"ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்துக்கு 'ஸ்ரீ ராமானுஜன் ' மற்றும் 'ஸ்ரீ வைஷ்ணவ சுதர்சனம்' ஆகிய இரு மதிள்கள் இருக்கும் வரை ஒன்றும் செய்ய முடியாது"



என்றே இருக்கும். கண்ணன் எம்பெருமான் கீதையில் தனது அவதார காரணத்தைக் குறிப்பிடும்போது, 'சாதுக்களை காப்பதும், துஷ்டர்களை அழிப்பதுமே' தனது நோக்கம் என குறிப்பிட்டான். அது போல இவ்விருவரும் நமது தரிசனத்தின் ஆழ்ந்த பொருள்களை வெளியிடுவதிலும், பொய் வார்த்தைகளை கண்டிப்பதிலுமே முழுவதும் ஈடு பட்டார்கள். இவர்கள் செய்த உபகாரங்கள் பல. இவர்களின் பதிப்புகளை வகைபடுத்தினால், 

  1. பூர்வர்களின் கிரந்தங்களை வெளியிடுவது 
  2. பூர்வாசார்யர்களின் க்ரந்தங்களுக்கு உரையிடுவது
  3. துர்வாதங்களை தவிடு பொடியாக்கித் தத்துவம் உணர்த்துவது 
  4. நாராயண பரத்வத்தை நன்கு விளக்குவது 
  5. நமது தரிசனத்தின் ஆழ் பொருள்களை அனைவருக்கும் நன்கு நெஞ்சில் பதியும்படி வெளியிடுவது 
என கொள்ளலாம். {இது ஒரு சின்ன அடைவே ஆகும்.} 


பெருமாள் காடேறப் புறப்படுவதை திருமங்கை ஆழ்வார் "சிலையும் கணையும் துணையாக சென்றான்" என குறிப்பிடுகிறார். அதே போல விவாதங்களில் ஈடுபடும் போது இருவரும் எழுதுகோலையும் சுவடியையும் மட்டுமே துணையாக கொண்டு விவாதங்களில் வெற்றி அடைந்தனர். 



இது தவிர பூர்வாசார்யர்களின் க்ரந்தங்களை பதிப்பிப்பதிலும் இருவரும்  மிகவும் ஊக்கம் கொண்டு இருந்தனர் இன்று நமக்கு கிடைக்கும் பல க்ரந்தங்கள் இவ்விரு சுவாமிகளும் மறுபதிப்பு செய்ததினால் என்றால் இது மிகையன்று.

ஸ்ரீ காஞ்சி சுவாமியின் சரிதை இங்கு கிளிக் செய்யவும் http://acharya.org/articles/vvr/AS-HLAA-VVR.pdf (நன்றி ஸ்ரீ வெங்கடேசன் ஸ்வாமி)

ஸ்ரீராமானுஜன் பதிப்புகளுக்கு இங்கு கிளிக் செய்யவும் (http://www.maransdog.org/Ramanujan/) (நன்றி ஸ்ரீ பாலாஜி ஸ்வாமி)

குறிப்பு:
பழைய ஸ்ரீவைஷ்ணவ சுதர்சனம் பதிப்புகள் இணைய தளத்தில் கிடைப்பது இல்லை. இணைய  முகவரி இருந்தால் கொடுத்து உதவவும்.

Appendix - I Eloquent & Articulate Expressions.


Article published in Hindu on Sri P.B.A Swamy by Dr. Varadharajan Swamy




Appendix - II Prolific Writer Ardent Thinker


Article published in Hindu on Sri S. Krishnaswamy Iyengar Swamy by Dr. Varadharajan Swamy



1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete