Showing posts with label emberumAnAr. Show all posts
Showing posts with label emberumAnAr. Show all posts

Sunday, August 3, 2014

ரஹஸ்யத்ரயம்

 ஸ்ரீ:
ஸ்ரீமத்யை கோதாயை நம:
ஸ்ரீமதே இராமனுசாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீமத்  வரத குரவே நம:


திருமாமகள் கேள்வனானய், ஸ்ரீ வைகுண்டாதிபதியான ஸர்வேஸ்வரன், ஸ்ரீ வைகுண்டத்திலே, நித்ய முக்தர்களுக்கு [நித்யர் - ஸம்ஸாரமாகிற  லீலா விபூதியிலே ஒரு நாளும் பிறவாதவர்கள், முக்தர் - ஸம்ஸாரத்தில் இருந்து அவனது திருவருளாலே விடுபட்டு மோக்ஷத்தை அடைந்தவர்கள்] பரமானந்ததை விளைவித்துக் கொண்டு, ஸேவை ஸாதிக்கிறான். இப்படி இருக்கச் செய்தே, அந்த நித்ய முக்தர்களைப் போலே, இந்நிலவுலகத்தில் வாழும் நமக்கும் அவ்வெம்பெருமானை அநுபவிக்க ப்ராப்தி (உரிமை) இருக்கச் செய்தேயும், நாம் அதை இழந்து கிடக்கும் தன்மையை நோக்கி, மிகவும் வருத்தப்பட்டு, "சாலப் பல நாள் உகந்து உயிர் காப்பான்" என்கிறபடியே சேதனர்களான ஜீவாத்மாக்களுக்கு ப்ரளய ஆபத்து வந்த போது  காப்பாற்றி, அவர்களுக்கு சரீரத்தையும், இந்த்ரியத்தையும் கொடுத்தருளினான். மேலும், சேதனர்கள் தவறான வழியில் செல்லாதபடி, நித்யமாய், ஒரு புருஷனாலே சொல்லப்படாததாய், ஸ்வத ப்ரமாணமாய் விளங்குகின்ற வேதத்தைக் கொடுத்தருளினான். வேதம் மட்டுமின்றி, அதை ப்ரகாஸப்படுத்துகிற, அதன் அர்த்ததை விளக்குகிற இதிஹாஸம், புராணம் மற்றும் ஸ்ம்ருதிகளையும் கொடுத்தருளினான். இதனையே "முனிவரை யிடுக்கியும் முந்நீர் வண்ணாயும் வெளியிட்ட சாஸ்த்ர தாத்பர்யங்கள்" என்கிறார் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். வேதத்தை தான் நேரே ப்ரம்மாவுக்கு கொடுத்தருளினது மட்டும் இன்றிக்கே, ரிஷிகளான முனிவர்கள் மூலமாக வேதத்தின் உபப்ரம்மணங்களான மற்றைய சாஸ்த்ரங்களை வெளியிட்டருளினான் *கலைகளும் வேதமும் நீதி நூலும் .... நீர்மையினால் அருள் செய்து * என்கிறபடியே.



இங்கு ஒரு ஸந்தேஹம் தோன்றும். புருஷோத்தமனான எம்பெருமான், நம்மை கண்டு ஏன் இறக்கம் கொள்ள வேண்டும்? இதற்கு *உன் தன்னோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது* எனப் பாடவல்ல நாச்சியார் அருளியபடி, எம்பெருமானுக்கு ஜீவர்கள் மேல் இருக்கும் ஸ்வாமித்வமே {ஸ்ரீமந் நாராயணன் - ஸ்வாமி; ஜீவர்கள் - அவனுடைய சொத்து;ஸ்ரீமந் நாராயணன்  -சேஷி, கைங்கர்யம் ஏற்றுக் கொள்ளுபவன்,  ஜீவர்கள் - சேஷபூதர்கள், அவனுக்கு கைங்கர்யம் பண்ணுகிறவர்கள்}, இப்படி க்ருபையை பிறப்பிக்கச் செய்யும்.


ஆனாலும், அவ்வேதத்தை அதிகரித்து, அதன் வழி நடந்து, அதன் அர்த்த விஷேசங்களைப் புரிந்து கொண்டு எம்பெருமானை அடைவது மிகவும் கடினமாகையாலே, அதன் ஸாரமாகிற ரஹஸ்யத்ரயதையும் ப்ரபலப்படுத்தியருளினான்.

இந்த ரஹஸ்யத்ரயம் என்றால் என்ன? - கீழில் காட்டப்படுகின்ற மூன்றேயாகும்.


  1. திருமந்த்ரம்
  2. த்வயம்
  3. சரம ஸ்லோகம்


இம்மூன்று ரஹஸ்யங்களை யார் யாருக்குச் சொன்னது என்பது நமக்குத் தெரிந்தால், இதனுடைய ஏற்றம்/பெருமை புரியும். திருமந்த்ரத்தை, ஸ்ரீ பதரிகாச்ரமத்திலே, ஸ்ரீமந் நாராயணனா எம்பெருமான் நர-நாரணர்களாய், ஆசார்ய சிஷ்ய வடிவையெடுத்து, ப்ரகாசப்படுத்தினான். த்வயத்தை ஸ்ரீவிஷ்ணு லோகத்திலே, பிராட்டிக்கு உபதேஸித்தருளினான். சரம ஸ்லோகத்தை அர்ஜுனனுக்கு, திருத்தேர் தட்டிலே உபதேஸித்தருளினான்.



ஸகல வேதத்தின் ஸாரமாகிற இந்த ரஹஸ்யத்ரயத்தையும், ஸமாச்ரயண காலத்தில்  ஆசார்யன் உபதேசித்தருளுகிறார்.  இவ்வர்த்தங்கள் இப்படி நமக்கு கிடைக்கக் காரணமானவர் ஸ்வாமி இராமானுசரே ஆகும்! பரமார்த்தமான இந்த ரஹஸ்யங்களை எம்பெருமானார்க்கு முன்புள்ள ஆசார்யர்கள் ஒராண் வழியாய், அதாவது ஒரு ஆசார்யர் ஒரு சிஷ்யனுக்கு உபதேசிக்க, அதுவும் மிகவும் பரீக்ஷை பண்ணி பின்பே உபதேசித்து வந்தார்கள். எம்பெருமானாரையே 18 தடவை வரச்செய்து, பின்பன்றோ திருக்கோஷ்டியூர் நம்பி உப்தேசித்தருளினார்! ஆனால் எம்பெருமானாரோ ஆசையிருந்தாலே போதும் என அதை மாற்றியருளினார். அதனால் வரம்பறுத்த பெருமானார் என்றே போற்றப்படுகிறார். இதை ஸ்வாமி பிள்ளை லோகாசார்யரே விவரித்தருளுகிறார். இந்த அர்த்தத்தின் மேன்மையைப் பார்த்ததாலே, எம்பெருமானார்க்கு முன்புள்ள ஆசார்யர்கள் வரம்பு வைத்து உபதேஸித்துவந்தார்கள். ஆனால் எம்பெருமானாரோ, ஸம்ஸாரிகளின் துர்க்கதியைப் பார்த்து அந்த வரம்பை அறுத்தருளினார்.

இங்ஙனம் ஸ்வாமி மணவாள மாமுனிகளின் முமுக்ஷுப்படியின் அவதாரிகையைத் தழுவி யதாமதி விண்ணபிக்கப்பட்டது.இந்த ரஹஸ்யத்ரயத்திலுள்ள அர்த்த விஷேசங்களை எல்லாம் அடக்கி, ஸூத்ரங்களாக ஆக்கித் தந்தருளினார், லோகதேசிகனான பிள்ளை லோகாசாரியார். அதற்கு மிகவும் அழகாக, பதம் பதமாகயெடுத்து வ்யாக்யானம் அருளியுள்ளார் விசதவாக் சிகாமணியான மணவாள மாமுனிகள். இந்த க்ரந்தத்தை அவசியம் அனைவரும், ஆசார்யன் திருவடிகளில் காலக்ஷேபமாகக் கேட்டு உய்வு பெறுவோமாக.

Thursday, January 31, 2013

பிராட்டியும் ஆழ்வானும்


 ஸ்ரீ:
ஸ்ரீமத்யை கோதாயை நம:
ஸ்ரீமதே இராமனுசாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீமத்  வரத குரவே நம:

பிராட்டியும் ஆழ்வானும் 

வரதார்ய குரோ: புத்ரம் தத்பதாப்ஜைக தாரகம்

ஜ்ஞாநபக்த்யாதி ஜலதிம் வந்தே ஸுந்தர தேசிகம்

கண்ணின்சிறுத்தாம்பு வ்யாக்யானத்தில், பெரிய ஆச்சான் பிள்ளை நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் என்கிற சந்தைக்கு வ்யாக்யானமிடும் பொழுது பிராட்டியையும் ஆழ்வானையும் போலே என்று அருளியுள்ளார். இப்போது நாம் இந்தக் கட்டுரையில் இருவரையும் ஒப்பிட்டு இருவரது திருக்குணங்களையும் பேசி மகிழலாம் - முக்கியமாக ஆழ்வானுடைய திருக்குணங்களை அனுபவிக்கலாம்.

ஆழ்வான் - பிராட்டி திருக்கோலத்தில் 
இந்தத் தேஹம் அழிந்தால் ஆத்மாவிற்கு பிராட்டிமார்களுடன் ஒப்புமை உண்டு என்பது ஸ்ரீவசனபூஷண திவ்யஸாஸ்த்ரத்தால் அறியப்படுவது. "கந்தல் கிழிந்தால் ஸர்வருக்கும் நாரீணாமுத்தமையுடைய அவஸ்தை வரக்கடவதாய் இருக்கும்" என்று 239 சூர்ணிகை. மேலும் ஆச்சார்ய ஹ்ருதயத்திலும் இவ்வர்த்தம், "வித்யை தாயாகப் பெற்று" என்கிற சூர்ணிகையில் விவரிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்வரனை ஆச்ரயிக்கும் பொழுது பெரிய பிராட்டியாரை புருஷகாரமாகக் கொண்டே ஆச்ரயிப்பது போலே இராமானுஜரை பற்றும் பொழுது ஆழ்வானை புருஷகாரமாகக் கொண்டே சரண் புகுவர் பூர்வர்கள். இதனை "மொழியை கடக்கும்" என்னும் இராமனுச நூற்றந்தாதிப் பாசுரம் கொண்டும் "ஸ்ரீவத்ஸசிஹ்ந சரணம் யதிராஜமீடே", "கூராதிநாத குருகேச முகாத்ய பும்சாம் ..." என்னும் யதிராஜ விம்சதி ஸ்லோகங்களை கொண்டு அறுதியிடலாம்.  (உடையவரைக் கொண்டாடுமிடத்தில் அவரை கூரத்தாழ்வானுக்கு ஸ்வாமி என்னுதல்)

பெரிய பிராட்டியார் புருஷகாரமாவதற்கு அவருடைய, 
  • க்ருபை, 
  • பாரதந்த்ரியம், 
  • அநந்யார்ஹத்வம் 
என்னும் மூன்று உயர்ந்த திருக்குணங்களே (அவரது ஸ்வாமியான பெருமாளைக் குறித்து) காரணம் என்பது ஸ்ரீவசனபூஷணம் சூர்ணிகை - 6 கொண்டு தெளிவது. புருஷகாரமாவது ரக்ஷிக்கமாட்டேன் என்று சொல்லும் ஈஸ்வரனை மாற்றி குற்றம் புரிந்தவனையும் ஏற்றுக் கொள்ள வைப்பது. அப்படி ஒருவர் கூறுவதை தன் காரியமாக நடத்தவேண்டும் என்றால் சிபாரிசு (புருஷகாரம்) செய்பவர் ஈஸ்வரனுக்கே அடிமைப்பட்டு இருக்க வேண்டும், அவன் வைத்த படி இருக்க வேண்டும் - அவனைத் தவிர வேறு எதையும் நாடாதவராக இருக்க வேண்டும். இவை இருந்த போதிலும் துன்பப்படுபவர்கள் பக்கல் இரக்கம் கொள்ள வேண்டும் 

இனி இவை மூன்றும் ஆழ்வானுக்கு அவரது ஆச்சார்யரான இராமானுசரை குறித்து இருப்பது காணலாம்.

க்ருபை

க்ருபையாவது பிறர் நோவு கண்டால் அவர்களிடம் இரக்கம் கொள்வது. பிறர் மீது இரக்கம் கொண்டால்தான், அவர்களை சிபாரிசு செய்வதற்கு திருஉள்ளம் இறங்கும் - இதுவே புருஷகாரத்திற்கு வேண்டுவது. இனி ஆழ்வானுக்கு இத்தகைய கிருபை இருப்பது கீழ்க்கண்ட நிகழ்வுகளில் இருந்து நிரூபணம்.


  1. ஒரு தடவை ஆழ்வான் , பாம்பின் வாயில் அகப்பட்ட தவளையின் த்வநி கேட்டு மூர்ச்சித்து கீழே விழுந்தார்!!! 
  2. ஒரு குழந்தை பிறந்த செய்தி அறிந்து நம்பெருமாளிடம் சென்று ஒரு ஜீவன் சம்சாரத்தில் பிறந்து அவஸ்தை படுகிறதே என்று முறையிட்டார்.
  3. தனது நடத்தையினால் தான் இராமனுசர் மேல்நாடு செல்லும் படியும் ஆழ்வான் தமது திருக்கண்களை இழக்கும்படி நேர்ந்தமையும் பெரிய நம்பி இவ்விபூதி விட்டு பரமபதம் செல்லும்படியும் நேர்ந்தது என வருந்திய நாலூரான் பொருட்டு ஈஸ்வரன் தண்டிப்பன் என்றஞ்சி, "நான் பெற்ற பேறு நாலூரானும் பெற வேண்டும்" என்று ஈஸ்வரனிடம் முறையிட்டுக் கொண்டார். (இது கீழில் விரிவாகக் காண்க)

பாரதந்த்ரியம்

பாரதந்த்ரியமாவது அதீனப்பட்டிருப்பது (உடையவருக்கு) - இது எங்கு நிரூபணம் என்னில்.
  1. உடையவர்  திருவரங்கதமுதனார் திருமாளிகைக்கு ஏஹாக்ரஹத்திற்கு புஜிக்கும்படி நியமித்த அளவிலே, ஆழ்வான் மறுவார்த்தை பேசாதே செல்லுதல் 
  2. திருவரங்கச்செல்வனார் சந்நிதி சாவியை உடையவர் திருவடிகளில் சமர்ப்பித்தல் 
  3. உடையவர் திருவீதி பிரதக்ஷிணத்திற்காக பெரிய நம்பி பின்னே செல்லும்படி நியமிக்குமிடத்து, அவர் பின்னே செல்லுதல் 
  4. உடையவர் சரம ஸ்லோகத்தின் விசேஷ அர்த்தத்தை அருளும் பொருட்டு ஒரு மாசம் உபவாசம் நியமிக்கும் பொழுது ஆசார்யன் திருமாளிகை திருவாசலிலே உபவாசம் இருத்தல்  
  5. பரமபதம் செல்லும் பொழுதும் உடையவருக்கு பின்பு சென்றால் அவத்த்யம் விளையுமே என்று, அவருக்கு முன்பு செல்லுதல் (புதிதாக வரும் அடியவருக்கு பரமபதத்தில் இருக்கும் நித்ய முக்தர்கள் திருவடி விளக்குவார்கள்)  
 ஆகியவை கொண்டு நிரூபிக்கலாம்.

அநந்யார்ஹத்வம் 

அநந்யார்ஹத்வமாவது -  அவருக்கே அற்றுத் தீர்ந்தமை; அவரை (உடையவரை) ஒழிய வேறொன்றிலும் செல்லாமை. இக்குணம்

  1. எம்பெருமானார் திருவரங்கம் பெரிய கோவில் விட்டு திருநாராயணபுரம் எழுந்தருளின  பின்பு, ஆழ்வான் திருவரங்கம் நம்பெருமாளை மங்களாசாசனம் செய்ய எழுந்தருளும் பொருட்டு ராஜ்ய சேவகர்கள் அவரைத் தடுக்க, அவர்களில் ஒருவன் அவரை தடுக்காதீர்கள் என்று விவாதிக்க - ஆழ்வான் என்ன என்று கேட்கும் பொழுது, உடையவரும் சம்பந்தம் உடையவர்களை உள் புக விடக்கூடாது என்று ஆணை - ஆனால் நீர் ஆத்ம குணங்கள் நிறைந்தவர் உம்மை உள்ளே விடுகிறோம் என்று விடை கூறினார்கள்.இது கேட்டு ஆழ்வான், " ஐயோ ஆத்ம குணங்கள் இருந்தால் அது ஆசார்யனைக் கிட்டுவதற்கு  உபயோகப்படும் - நமக்கு அதுவே அவரது சம்பந்த்தத்தை இழப்பதற்கு வழி கொடுக்கிறதே" என்று வருந்தி உடையவர் இல்லாமல் பெருமாள் சேவிக்க வேண்டாம் என்று திரும்பினார் 
  2. எம்பெருமானார் ஸ்ரீபாஷ்யம் சாதிக்கச்செய்தே, ஆழ்வானைச் சீறி வெளியேற்ற, அதற்க்கு ஆழ்வான் "இவ்வாத்மா உடையவருக்கு சேஷம்; அவரிஷ்டம் போல் அதை பயன்படுத்தலாம்" என்று அருளிச்செய்தார்.
 என்னுமிடத்தில் காணாலாம்.

சிறையிருந்தவள் ஏற்றம் சொல்லிய ஸ்ரீ ராமாயணத்தில் பிராட்டியின் பெருங்குணமாக வெளியிட்டிருப்பது, பிராட்டி தன்னை நலிந்த ராக்ஷஷிகளையும் திருவடியிடம் இருந்து ரக்ஷித்தது என்பதேயாம். இத்தகைய பெருங்கருணையும் தாயாள குணமும் கொண்ட ஆச்சார்யர் ஸ்ரீ கூரத்தாழ்வான் என்று சொல்லலாம்.


ஆகையால் அன்றோ தான் திருக்கண்கள் இழக்கக் காரணமாய் இருந்த நாலூரனுக்காக அஞ்சி, பெருமாள் சீறியருள்வரே என்று மிகவும் திருஉள்ளம் இறங்கி, கச்சி வரம் தரும் பெருமாள் தமக்கு வீடு பேறு அருளியவுடன், அப்பேறு நாலூரனுக்கும் அருள வேண்டும் என வேண்டினார். என்னே ஒரு திருக்குணம்!!!

ஸ்ரீமத் கூரகுலாதீசம் ஸ்ரீவத்சாங்க முபாஸ்மஹே |
அக்ர்யம் யதீந்திரசிஷ்யாணாம் ஆத்யம் வேதாந்த வேதிநாம் ||

மொழியைக் கடக்கும் பெரும் புகழான் வஞ்சமுக்குறும்பாம் 
குழியை கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடிய பின் 
பழியை கடத்தும் இராமானுசன் புகழ் பாடி அல்லா 
வழியைக்  கடத்தல்  எனக்கு இனி யாதும் வருத்தமன்றே.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 

ஆதாரம் - இராமானுஜ ரஹஸ்யத்ரயம், 6000 படி குருபரம்பரா பிரபாவம் 

Friday, December 21, 2012

Srimadh Thirumalai AnanthAn Pillai Mandayam AnanthAzhwar Swami Vaibhavam


Sri:
Srimathae Ramanujaya namaha
Srimath VaraVaramunayae namaha

English Translation of 

Srimadh ThirumalaiAnanthAnPillai Mandayam 

AnanthAzhwar Swami Vaibhavam

Authored by 

Ubhaya Vedantha Maha Vidwan Kanchi Sri Prathivaathi Bayankaram 


ANNANGARACHARYA SWAMI




This Swamy descended to earth on 1822 A.D, swabAnu samvathsaram in the month of Panguni on star AshleshA in mAndayam. Then Swamy moved to thirunArayanaurAm as swEkAram. Legend goes that swamy is amsA of AdhisEshA and owing to that only swamy has been named so. It is also said that swamy increased his pAndithyam using 'jyothismatheelathai thailam'. Swamy learnt all the sAstras from mysore Sri KoolipAlAchAr. Swami learnt Sri BhAshya and Bhagavath Vishaya from his father Sri. Maha BhAsya SingarAcharyar. Swami went to a Jaina Mutt near ‘sranau pau kau’ , a place in Mysore Jilla to teach sAstras to the mAdathipathi. Brama sOri Pandithar, mAdathipathi of this mutt learnt all the sAstras from this mahAn for three years. During that time, Swami developed in depth knowledge in the Lowgatha, Argatha granthAs.

Swami’s pandithyam started growing. Mysore ParakAla mata swami Srimadh Sri SrinivAsa Brahma tAntra Swami, while visiting ThirunArayanaPuram was surprised by Swami’s pAndithyam and recognized Swami as Asthana Vidwan of Sri Mutt. Swamy was barely 27 years old during that time! During such early age itself, Swami excelled in chadhussAstram, vAkyArtham and authored lots of granthAms. Swami will go along with Sri parakAla swamy during yAthrAs and will win over many vidwAns and corrected them. Seeing this, swami has been prized by mysore mahArAja too.

Swami has authored many vedAnta vAdha granthAs, alankAra granthAs & granthAs in tharkA sAstra. pandhithAs who go through sri bhAshya without studying 'vedAnta vAdavali' authored by this swami will not be considered as vedAnthis! Such is the greatness of this granthA!

Swamy lived in this vibuthi for only 40 years. Swamy started writing kandanam for the best advaita granthA "advaitha siddhi" in the name of nyaya bAskaram. when swamy completed the first parisedham, advaithis cognizant of this started calling swami for vAdha. During that time, some sri vaishnavas of parakAla mutt thought this as the right time to convert Swami to their sampradAyam. they started telling dhooshanas towards Sri Vara Vara muni to Swami. Swami was very much disturbed because of this. that night in his dream Adhi seshA came as first sri rAmanuja and then sri manavAla mAmuni

swami was clarified because of this dream and wrote the following in the very next day in his nyaya bAskaram

seshA: srimAn nikama makudEyukmA rakshAp ravrutha:
srimath rAmAvaraja munithAm soumya jAmAthru thAnja:
vinthan drupyath vimathapadalI pAdanOth dAma sookthi:
bUyAth bavya prathina mahimA sreyasE bUyasena:

apart from this, Swami's vaibhavam has been recorded by KalkiSimham NarasimAchAriyar in his vaibhava prakAshika. This sangrahA is also taken from the granthA. 


Friday, October 12, 2012

இராமானுசன் தாள் பிடித்தார் பிடித்தார்


 ஸ்ரீ:
ஸ்ரீமத்யை கோதாயை நம:
ஸ்ரீமதே இராமனுசாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீமத்  வரத குரவே நம:

கற்றோர்கள் தாமுகப்பர் கல்வி தன்னில் ஆசையுள்ளோர் 
பெற்றோம் என உகந்து பின்பு கற்பர் - மற்றோர்கள் 
மாச்சர்யத்தால் இகழில் வந்ததேன் நெஞ்சே இகழ்கை 
ஆச்சர்யமோ தான் அவர்க்கு.

நமது ஸ்ரீவைஷ்ணவ உலகமானது நிச்சலும் "ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர்" திருவடிகளே சரணம் என ஓதி வருவதை காண்கிறோம். நமது ஒப்பிலாத ஒராண் வழி குருபரம்பரையானது பெரிய பெருமாள் தொடக்கமாக ஸ்ரீ மணவாள மாமுனிகள் பர்யந்தம், ஸ்வாமி உடையவரை நடுவாகக் கொண்ட ரத்ன ஹாரமாக விளங்குவதை காண்கிறோம்.

இனி எப்படி உடையவர், நம்மாழ்வாருக்கு பிராண பூதராய், திருவடி நிலையாய், மாறன் அடி பணிந்து உய்ந்தவர் ஆகிறார் எனவும்; மணவாள மாமுனிகள் உடையவரின் மீது ப்ராவண்யம் உடையவராய், அதுவே அவர்க்கு விஷேஷமாய் திகழுவதையும் காணலாம்.

நம்மாழ்வாரின் திருவடி நிலைகள், "இராமானுசன்" என்றே அழைக்கபடுகிறது. இப்படி அழைப்பதன் காரணம் என்ன? ஒவ்வொரு ஆச்சார்யரின் அவதாரத்திற்கும் ஒரு விசேஷ/முக்கிய  காரணம் இருக்கும். பெரிய ஆச்சான் பிள்ளையின் திரு அவதார நோக்கம் 4000 திவ்ய பிரபந்தங்களுக்கும் வியாக்யானம் செய்வதே ஆகும். பட்டரின் திரு அவதார நோக்கம் ஸ்ரீரெங்கத்தின் ஏற்றத்தை நிலைநிறுத்துவதே ஆகும். 



எம்பெருமானாரின் திரு அவதார நோக்கமோ, ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தத்தையும் கொள்கைகளையும் நன்கு நிலை நிறுத்தி பரவச் செய்வதே ஆகும். எம்பெருமானார் எந்த துணை கொண்டு இதைச் செய்தார் எனில், திருவாய்மொழியினைக் கொண்டே என அனைவரும் ஒரு மிடறாக கூறுவர்கள். அதனாலயே அவருக்கு நம்மாழ்வார் மீது விசேஷ ப்ராவண்யம் ஆயிற்று. திருவாய்மொழியினையும் நம்மாழ்வாரின் பெருமைகளையும் பரவச் செய்தார். எனவே தான் அவர் "மாறன் அடிபணிந்து உய்ந்தவர்" என கொண்டாடப்படுகிறார்.

யதீந்த்ரரும் யதீந்திர ப்ரவணரும் 

நிற்க. இப்போது பெரிய ஜீயரை பற்றி பார்க்கலாம். மணவாள மாமுனிகளின் திரு அவதார நோக்கமானது எம்பெருமானரை போற்றுவதே ஆகும். மற்றும் அவரது பெருமைகளை உலகோர்க்கு பறை சாற்றி, எம்பெருமானாரே நமக்கெல்லாம் ப்ராப்ய பிராபக பூதராய் விளங்குகிறார் என்பதையும் நன்கு விளங்கச்செய்வதே ஸ்வாமி மணவாள மாமுனிகளின் திரு அவதாரத்தின் சீரிய நோக்கம் ஆகும்.  
  1. ஸ்வாமி திருவவதாரம் செய்தது ஆழ்வார் திருநகரியிலே. உடையவருக்கு பிராண பூதரான நம்மாழ்வார் அவதரித்த இடம் என்பதினாலும்,
  2. சடகோப தாசர் என்னும் ஸ்ரீசைலரான திருவாய்மொழி பிள்ளையை ஆச்ரயிப்பதாலும்,
  3. ஸ்வாமி திருவாய்மொழிப் பிள்ளையை ஆச்ரையித்திருந்த காலத்தே, பவிஷ்யதாசார்யன் சந்நிதியிலே உடையவருக்கு நித்ய திருவாராதனாதிகள் நடத்தினார் என்பதாலும், 
  4. ரகஸ்யத்ரயத்தினாலும் அறுதியிடப்படும் பொருள் ஆசார்யனே (ஆசார்யன்/தேசிகன் என்னும் சப்தம் நமது சம்பிரதாயத்தில் உடையவரையே பற்றி இருக்கும்) என்பதை விளக்கும் பொருட்டு 20 ச்லோகங்களினால் யதிராஜ விம்சதி அருளியது!! (ரகச்யங்களினுடைய பத எண்ணிக்கை 20- திருமந்தரம் - 3; த்வயம் - 6 சரம ஸ்லோகம் - 11)
  5. ஆர்த்தி பிரபந்தம் எனும் அற்புத கிரந்தம் அருளிச்செய்து ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ப்ராப்ய ப்ராபகம் எம்பெருமானார் திருவடி நிலைகளே என நிலை நாட்டியது, (ஒரே ஒரு பாசுரம் அனுபவிப்போம்). வாழி எதிராசன் வாழி எதிராசன் வாழி எதிராசன் என வாழ்த்துவார் - வாழி என வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் தாளிணையில் தாழ்த்துவார் விண்ணோர் தலை.
  6. எம்பெருமானார் நியமனமான 74 சிம்மாசனாதிபதிகள் குறிக்கும் பொருட்டு 74 வெண்பாக்களால் உபதேச ரத்தினமாலை அருளியது, (ஸ்வாமியின் இந்த சங்கல்பம் தெரிந்து இதில் ஸ்வாமியின் பிரச்தாவம் இல்லாது இருக்க கூடாது என விரும்பிய எறும்பி அப்பா, நம்பெருமாளை 73 வெண்பாக்களுடன் இந்த பிரபந்தம் முடியும் படி பிரார்த்தித்து, 74 வது பாசுரமாக மன்னுயிர்காள்  இங்கே.... சேர்த்தருளினார்),
  7. ஸ்வாமி தனது ஆர்த்தி பிரபந்தத்தில், ஸ்ரீரெங்கத்தில் எழுந்தருளியிருக்கும் உடையவர் திருமேனியின் மீது தமது ஆதராதிசதியத்தை வெளியிட்டருளியது
ஆகியவை கொண்டு இவர்த்தம் அறுதியிடலாம்.


இவை எல்லாம் தாண்டி, ஸ்ரீரங்கத்திலும், ஆழ்வார் திருநகரியிலும் ஸ்வாமியின் திருமேனியை சேவிக்கும் கால், ஒரு விஷேஷ பரமானந்தம் ஏற்படுகின்றது. இவ்விரு திவ்ய தேசங்களிலும், ஸ்வாமி உற்சவ காலங்களில் வாஹன புறப்பாடு கண்டருளுவது இல்லை, மற்றும் திருஅத்யயன உற்சவத்திற்கு எழுந்து அருளுவதும் இல்லை (ஆழ்வார் திருநகரியில் ஸ்வாமி சாற்றுமுறை அன்று மட்டும் எழுந்தருளுகிறார்). இவ்விரு திவ்ய தேசங்களிலும் அனைத்து பெருமைகளும் நம்மாழ்வாருக்கும், உடையவருக்குமே  உண்டாகவேண்டும் என ஸ்வாமி தமது திருமேனியை வாமனன் போல் சுருக்கி கொண்டார்!

ஆகையால் அன்றோ, எம்பார், பட்டர், வடுக நம்பி, நம்பிள்ளை என பல மகாசார்யர்கள் இருந்தும், மணவாள மாமுனிகள் "யதீந்திர ப்ரவணம் வந்தே"  என  நம்பெருமாளால் கொண்டாடப் பட்டார். அதனால் அன்றோ நம்பெருமாள் இவருக்கு ஆச்சார்ய ஸ்தானத்தையும் கொடுத்து, ஆதி சேஷ பர்யங்கத்தையும் கொடுத்தான்! இது என்றோ நடந்தது என்னாதே, இற்றைக்கும் ஸ்வாமியின் திருஅத்யயனனத்தை, சிஷ்யனான தான் நடத்தி வருகிறான்! (மேலும் அறிந்து கொள்ள http://kaarimaaran.com/thiruadhyayanam.html)



மணவாள மாமுனிகள் - ஸ்ரீபெரும்பூதூரில் சேவை சாதிக்கிறபடி 

இன்னும், ஆழ்வார் அடியார் அடியார் அடியார் தம் அடியார் தமக்கு அடியார் அடியார் தம் அடிகளே என 7வது திருவடி சம்பந்தத்தை விசேஷித்து கொண்டாடியுள்ளார்.

இப்பொழுது கண்ணபிரான் திருவடியான சடகோபரிடம் இருந்து 
  1. மதுரகவிகள் 
  2. நாதமுனிகள் 
  3. உய்யக்கொண்டார் 
  4. மணக்கால் நம்பி 
  5. ஆளவந்தார் 
  6. பெரிய நம்பி 
  7. உடையவர் 
என உடையவர் 7வது சம்பந்தத்தால் ஏற்றம் பெற்று மாறன் அடி பணிந்து உய்ந்தவர் ஆனாப் போலே, இராமானுசன் தாளான 
  1. எம்பார்  
  2. பட்டர் 
  3. நஞ்சீயர் 
  4. நம்பிள்ளை 
  5. வடக்கு திருவீதி பிள்ளை/ பிள்ளை லோகாச்சாரியர் 
  6. திருவாய்மொழி பிள்ளை 
  7. மணவாள மாமுனிகள் 
இந்த விசேஷ சம்பந்தம் இருப்பதினால் தான், நமது ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயதவர்கள் அனைவரும் "இராமானுச தாசன்" என சொல்லி கொண்டாலும், மணவாள மாமுனிகள் ஒருவர் மட்டுமே யதீந்திர ப்ரவணர் என போற்றப்படுகிறார்.

ஸ்ரீ மணவாள மாமுனிகள் - காஞ்சிபுரம் 

இந்த சம்பந்தத்தை வரவரமுநி தமது ஆர்த்தி பிரபந்தத்தில் சூசகமாக உணர்த்தயுள்ளார். அந்த செய்யுள் பின்வருமாறு.

பூமகள்கோன் தென்னரங்கர் பூங்கழற்கு பாதுகமாய்த் 
தாம் மகிழும் செல்வச் சடகோபர் - தேமலர்த்தாட்கே 
எய்ந்து இனிய பாதுகமாம் எந்தை இராமானுசனை 
வாய்ந்து எனது நெஞ்சமே வாழ்  

இதையே நாம் அனைவரும் உய்யும் பொருட்டு பிள்ளை உறங்காவில்லி தாசர் இயல் சாற்று முதல் பிரபந்தத்தில், 

நன்றும் திருவுடையோம் நானிலத்தில் எவ்வுயிர்க்கும் 
ஒன்றும் குறையில்லை ஓதினோம் - குன்றமெடுத்தான்  
அடிசேர் இராமானுசன் தாள் பிடித்தார் 
பிடித்தாரை பற்றி.

என பிரசாதிதருளியுள்ளார்.

ஓதினோம் - என்ன ஓதினோம்?

ஒன்றும் குறை இல்லை ஓதினோம் - யாருக்கு? 

இராமானுசன் தாள் பிடித்தார் பிடித்தாரை (ஸ்ரீ மணவாள மாமுனிகளை) பற்றியவர்களுக்கு  - அந்த இராமானுசன் எப்படி பட்டவர் எனில் 

குன்றம் எடுத்தான் அடி சேர் -  கண்ணன் எம்பெருமானின் திருவடிகளை பற்றியவரான மாறன் அடிபணிந்து உய்ந்தவர் 

குன்றமெடுத்தான் அடி சேர் இராமானுசன் தாள் பிடித்தார் பிடித்தாரை பற்றியவர்களுக்கு - ஒன்றும் குறை இல்லை ஓதினோம்!

ஆக, இப்படி கண்ணன் கழல்களான நம்மாழ்வார், அவர் திருவடி நிலைகளான பகவத் இராமானுஜர், அவர் திருவடி நிலைகளாக விளங்குகின்ற மணவாள மாமுனிகளை அடைந்தவர்களுக்கு, உறு துயர் அடையாவே!


ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஆதாரம் - ஸ்ரீ வைஷ்ணவ சமய ஆசார நிஷ்கர்ஷம், ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்.


அனுபந்தம் - 1

ஸ்ரீ ஸூக்தி ரத்னாகரம் - ஸ்ரீமதுபயவே. இளையவில்லி. சடகோபாச்சாரியார் ஸ்வாமி ஸ்ரீமுகத்தில் இருந்து தொகுத்தது 



மூலம் - ஸ்வாமி உபய வேதாந்த மஹா வித்வான் காஞ்சி பிர.ப ஸ்வாமியின் தன் சரிதை சுருக்கம்